மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து மும்முரம் -போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் காவல்துறையினர் குவிப்பு என வரலாறு காணாத பாதுகாப்பு

Oct 10 2019 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாமல்லபுரத்தில் சீன அதிபரும், பிரதமர் மோடியும், நாளையும், நாளை மறுநாளும் சுமார் 6 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக கடற்படை போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், போலீசார் குவிப்பு என வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் சீன அதிபர் ஜி ஜின்பிங், நாளை பிற்பகல் மதியம் 1.30 மணிக்கு, தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை, பிரதமர் மோடி வரவேற்கிறார். அங்கு சுமார் 15 நிமிடங்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் அங்கிருந்து கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு பிரதமர் மோடி பயணமாகிறார். விமான நிலையத்தில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் ஜின் பிங், மதியம் 2.05 மணிக்கு கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு செல்கிறார். அந்த ஓட்டலில் தங்கும் ஜின் பிங், மாலை 4 மணி அளவில் மாமல்லபுரம் புறப்படுகிறார். சென்னையில் இருந்து 55 கிலோ மீட்டர் தூரம் செங்கொடி காரில் செல்லும் அவர், மாலை 4.55 மணி அளவில் மாமல்லபுரம் சென்றடைகிறார்.

அங்கு அவரை பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். இதன் பின்னர், தலைவர்கள் இருவரும் புராதன கலை சின்னங்களை பார்வையிடுகிறார்கள்.

மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத கண்ணாடி மண்டபத்தில் இரவு விருந்திலும் தலைவர்கள் இருவரும் பங்கேற்கிறார்கள். இதன் பின்னர் இரவு 8.05 மணி அளவில் மாமல்லபுரத்தில் இருந்து புறப்பட்டு கிண்டி ஓட்டலுக்கு ஜின் பிங் வந்து சேர்கிறார்.

நாளை மறுதினம் காலை 9.05 மணிக்கு கிண்டி ஓட்டலில் இருந்து புறப்படும் ஜின் பிங், காலை 9.50 மணி அளவில், மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு அவரும், பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அங்கு மதியம் 12.45 மணி வரை இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவதோடு, மதிய விருந்தும் நடைபெறுகிறது.

விருந்துக்கு பின்னர் மதியம் 12.45 மணிக்கு புறப்படும் ஜின் பிங்,1.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்கிறார். மதியம் 1.30 மணிக்கு அவர் சென்னையில் இருந்து சீனாவுக்கு தனி விமானத்தில் புறப்படுகிறார்.

இரு நாட்டு தலைவர்களின் வருகையை ஒட்டி, மாமல்லபுரம் மற்றும் சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதனிடையே, சீனாவில் இருந்து அதிகாரிகள் 150 பேர் தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்‍கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்‍கப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00