சீன அதிபரின் வருகையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் : நாளையும், நாளை மறுதினமும் முக்கிய சாலைகளில் அமலாகும் என காவல்துறை அறிவிப்பு

Oct 10 2019 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீன அதிபரின் வருகையொட்டி நாளையும், நாளை மறுதினமும், சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நகரின் முக்கிய சாலைகளான, ஜி.எஸ்.டி சாலை, அண்ணா சாலை,, படேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் இசிஆர் சாலைகளில் நாளை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை பெருங்களத்தூரில் இருந்து ஜிஎஸ்டி சாலைக்கு வாகனங்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெருங்களத்தூரில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படும். ராஜீவ் காந்தி சாலை,கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் முன்னேற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட சாலைகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பயணதிட்டத்தையும் வழித்தடங்களையும் முன்னேற்பாடு செய்யுமாறு சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00