கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் - அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Sep 21 2019 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் கடந்த 6 நாட்களாக நீடித்து வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

புதிய மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கடந்த 16-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு லாரியில், ஒரு கண்டெய்னர் மட்டுமே ஏற்ற வேண்டும், லாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும், மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தால், சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் சுமார் 2 லட்சம் கண்டெய்னர்கள் தேக்கமடைந்தன. இந்த நிலையில், தண்டையார்பேட்டை வட்டாட்சியர் மற்றும் சி.எஃப்.எல் நிறுவனம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00