தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நபர் நெல்லையில் பதுக்கி இருப்பதாக வெளியான தகவல் - என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை

Sep 21 2019 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லையில் சோதனையில் ஈடுபட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள், வீரவநல்லூர் பகுதியில் வசிக்கும் திவான் முஜிபர் என்பவரது வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தின்போது தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமைடந்தனர். இந்நிகழ்வினையடுத்து, சர்வதேச அளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, கேரளாவில் தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை, கோவை, நாகை உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட சோதனையில், தீவிரவாத அமைப்பில் தொடர்புடையதாக கருதப்படும் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், நெல்லையில் வீரநல்லூர் பகுதியில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். வளைகுடா நாட்டில் பணியாற்றிய திவான் முஜிபர் என்வருக்கு, தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை அவரது வீட்டில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00