உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேகாலயாவுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

Sep 20 2019 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி, மேகாலயாவுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே. தஹில் ரமாணி, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தஹில் ரமாணி, தனது பதவியை கடந்த 6-ந் தேதி ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. பின்னர் கடந்த 9-ந் தேதி முதல் இன்று வரை கடந்த 14 நாட்களாக அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. தலைமை நீதிபதி இல்லாமல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு பரிந்துரைத்ததை ரத்து செய்யக்‍ கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் வழங்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00