வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தார் முன்னிலையில் இளைஞர் வெட்டிக்‍கொல்லப்பட்ட பயங்கரம் - முன்விரோதம் காரணமாக சென்னை திருவல்லிக்‍கேணி பகுதியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

Sep 20 2019 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை திருவல்லிக்கேணியில் முன்விரோதம் காரணமாக 2 பேர் வீடு புகுந்து ரவுடியை படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலை மாட்டான்குப்பம் கெனால் தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவர் மீது கொலை வழக்கு உள்ளது. ரவுடி பல்புகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் அறிவழகன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவர் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அறிவழகன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென புகுந்த 2 பேர், அவரை பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அறிவழகன் அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் 2 பேரும் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். இதில் அறிவழகனின் தலை, முகம், கை, கால்களில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் பலியானார். கொலையாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அறிவழகனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்‍கு அனுப்பி வைத்தனர். அறிவழகனை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தக்‍ கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00