ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு வயிற்றுப் பகுதியில் இருக்க வேண்டிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் உரிய இடத்தில் பொருத்தம்

Sep 19 2019 8:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வரலாற்றில் முதன்முறையாக ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு வயிற்றுப் பகுதியில் இருக்க வேண்டிய உறுப்புகள் மார்புப்பகுதியிலிருந்ததை கண்டறிந்து நவீன அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் உரிய இடத்தில் பொருத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். வேன் ஓட்டுநரான இவருக்கு ரித்திகா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் ரித்திகாவுக்கு தீராத காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டும் குழந்தைக்கு குணமடையாததால், சந்தேகமடைந்த மருத்துவர்கள் குழந்தைக்கு எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில், குழந்தைக்கு வயிற்றுப் பகுதியில் இருக்க வேண்டிய குடல், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் இடம் மாறி மார்புப் பகுதியில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து டிப்ரமேட்டியா எனப்படும் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அறுவைச் சிகிச்சை முடிந்து குழந்தை தற்போது நலமுடன் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00