மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் : அகில இந்திய பார் கவுன்சில் வலியுறுத்தல்

Sep 12 2019 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை உயர்நீதிமன்ற பணிகள் பாதிக்‍கப்பட்டுள்ளதால், மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற, குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அகில இந்திய பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்ட தஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் அமைப்பு கடந்த வாரம் பரிந்துரைத்தது.

இடமாற்றம் தொடர்பாக மறுபரிசீலனை செய்ய கொலிஜியத்திற்கு தஹில் ரமானி கடிதம் எழுதிய நிலையில், கோரிக்‍கை நிராகரிக்‍கப்பட்டது. இதையடுத்து, தனது ராஜினாமா கடிதத்தை தஹில் ரமானி குடியரசுத் தலைவருக்‍கு அனுப்பினார்.

இந்நிலையில், கொலிஜியத்தின் முடிவை மதித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி மேகாலயா செல்ல வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்ற பணிகள் பாதிக்‍கப்பட்டுள்ளதால், மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற குடியரசு தலைவர் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அகில இந்திய பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00