கஜா புயலுக்குப் பின் நாகை மாவட்டத்தில் போதிய மழை இல்லை : காவேரி நீரை கடலில் வீணாக கலக்கவிடாமல் நீர்நிலைகளில் நிரப்ப கோரிக்கை

Sep 11 2019 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
கஜா புயலுக்குப் பின்பு, நாகை மாவட்டத்தில் போதிய மழை பெய்யாத நிலையில், தற்போது கிடைக்கப்பெற்ற தண்ணீரைக்கொண்டு நீர் நிலைகளை நிரப்பாமல் கடலில் வீணாக கலப்பதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேட்டூரிலிருந்து 70 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி, வெண்ணாறு மற்றும் கிளை ஆறுகளில் 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தண்ணீரில் 40 ஆயிரம் கனஅடி நீர் முக்கொம்பு மற்றும் கல்லணை வழியே கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. சுமார் மூன்று புள்ளி 5 டி.எம்.சி அளவு கொண்ட 40 ஆயிரம் கன அடி தண்ணீர் நாகை மாவட்ட எல்லையான, திருச்சிற்றம்பலத்தை நேற்று வந்தடைந்தது. இந்த கொள்ளிடம் உபரி நீர், இன்று பழையாறு அருகே கடலுடன் கலக்கும்.

கஜா புயலுக்குப் பின்பு நாகை மாவட்டத்தில் போதிய மழை பெய்யாத நிலையில், ஆறுகள், குளங்கள், காய்ந்து நிலத்தடி நீர் மட்டம், வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போது கிடைக்கப்பெற்ற தண்ணீரைக்கொண்டு நீர் நிலைகளை நிரப்பாமலும், விவசாயத்திற்கு பயன்படுத்தாமலும், தண்ணீரை கடலுக்கு வீணே கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நாகை மாவட்டம் மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை நேற்று காவிரி நீர் வந்தடைந்தது. அப்போது அங்கு காத்திருந்த விவசாயிகள் காவேரி நீரை மலர்தூவி வணங்கி வரவேற்றனர். மேலும், முறை வைக்காமல் தொடர்ந்து தண்ணீர் வழங்கவும், சம்பா சாகுபடிக்கான மானிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00