தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை எதிரொலி : வேளாங்கண்ணி பேராலயம், தஞ்சை பெரிய கோயில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Aug 23 2019 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்திற்குள் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதால், வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் தஞ்சை பெரிய கோவிலில், பாதுகாப்புக்காக துப்பாக்‍கி ஏந்திய போலீசார் குவிக்‍கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, தமிழகம் முழுவதும் கோவில் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 29-ம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு திருவிழா நடைபெறவுள்ளது. இதனால் வேளாங்கண்ணி பேராலயத்தில், பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நாகை கடலோர சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகளில், தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிவேக படகுகளில் சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், தஞ்சையில் உள்ள உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். ரயில் நிலையம் உள்பட சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00