ஆந்திராவில் கனமழை பெய்த நிலையிலும், தடுப்பணையால் தமிழகத்திற்குத் தண்ணீரே வராதது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக டிடிவி தினகரன் கருத்து - உரிய நீரைப்பெற பழனிசாமி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Aug 22 2019 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திராவில் கனமழை பெய்த நிலையிலும், தமிழகத்திற்குத் தண்ணீரே வராதது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். உரிய நீரைப்பெற பழனிசாமி அரசு உடனடியாக எடுக்க வேண்டுமென்றும் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு சட்ட விரோதமாக தடுப்பணைகளைக் கட்டியதால், கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் கனமழை பெய்த நிலையிலும், தமிழகத்திற்குத் தண்ணீரே வரவில்லை என்பது, பெரும் அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவில் உற்பத்தியாகி, ஆந்திராவில் 36 கிலோ மீட்டர் மட்டுமே பயணித்து, தமிழகத்தில் இருநூற்று 22 கிலோ மீட்டர் தூரம் ஓடும் நம்முடைய முக்கியமான நீராதாரங்களில் ஒன்றாக பாலாறு திகழ்வதாக குறிப்பிட்டுள்ள திரு. டிடிவி தினகரன், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், நான்கு புள்ளி இரண்டு பூஜ்ஜியம் லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்திற்கும், குடிநீருக்கும் பாலாற்று தண்ணீரைத்தான் நம்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பாலாற்றில், தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுப்பதற்காக, புதிய தடுப்பணைகளைக் கட்டுவதற்கு ஆந்திர அரசு முயற்சித்தபோது, அதனை, புரட்சித்தலைவி அம்மா கடுமையாக எதிர்த்தார் - தடுப்பணை பணிகளை நிறுத்த விடுத்த கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாததால், உச்சநீதிமன்றத்தை நாடி, சட்டப்படியான தீர்வினைப் பெறுவதற்கான முயற்சிகளும், அம்மா முதலமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டன - ஆனால், அம்மாவின் மறைவுக்குப் பிறகு, ஏற்கனவே உள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகப்படுத்துவது, புதிய தடுப்பணைகளைக் கட்டுவது என ஆந்திர அரசு முழுவீச்சில் செயல்பட்டது.

பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்திவரும் முதலமைச்சர் பழனிசாமி, பாலாறு விவகாரத்தில், போதிய அக்கறை காட்டாததன் விளைவே தற்போது அங்கே கனமழை பெய்தும் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் வந்து சேராத நிலை உருவாகியுள்ளது - இதனால் ஏற்பட்டிருக்கிற, ஏற்படப்போகிற எதிர்கால பாதிப்புகளையும் முழுபுள்ளி விவரங்களுடன் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் முன்வைத்து, பாலாற்றில் நடைபெறும் தடுப்பணை சார்ந்த அனைத்து பணிகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் என, திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாலாற்று நீர் பகிர்வு குறித்து, 1892-ம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தையும், தடுப்பணை பணிகளை, தமிழகத்தின் அனுமதியின்றி மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்காத ஆந்திர அரசிடம் இழப்பீடு கேட்டு, தனி வழக்கையும் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் தொடர வேண்டும் என்றும் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

36 கிலோ மீட்டர் தூரத்தில், 29 தடுப்பணைகளை ஆந்திரா கட்டிவிட்டதால், பாலாற்றில் இனி, சுத்தமாக தண்ணீர் வராத நிலை உருவாகி இருக்கிறது - எனவே, மத்திய அரசின் உதவியோடு, பழைய ஒப்பந்தத்தைப் புதுப்பித்து, தமிழகத்திற்கு பருவந்தோறும் பாலாற்றில் விடவேண்டிய தண்ணீரின் அளவை நிர்ணயித்து, புது ஒப்பந்தம் போடுவதற்கான நடவடிக்கைகளை, பழனிசாமி அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00