அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை தஞ்சாவூரில் கழக நிர்வாகிகள் பலர் சந்திப்பு

Aug 19 2019 8:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, தஞ்சாவூரில் கழக நிர்வாகிகள் பலர் சந்தித்தனர்.

திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த திரு.வீர.ராமகுருவின் இளைய சகோதரரும், திருவாரூர் மாவட்ட மன்னை ஒன்றிய பாசறை இணை செயலாளரும், மணமகனுமான திரு.வீர.ராஜ்கமலின் திருமண விழாவில் கலந்துகொள்ள வேண்டி கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை தஞ்சையில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினர். இந்த சந்திப்பின் போது, திருவாரூர் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் திரு.தமிழ்வாணன், திருவாரூர் மாவட்ட செயலாளர் திரு.காமராஜ், திருவாரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு.சிவா ராஜமாணிக்கம் மற்றும் மன்னை மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.ரங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட திருவோணம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திரு.பி.ஞானப்பாவின் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி.தினகரனிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

கழக தொண்டர் திரு.லோகநாதன் திருமதி அபிநயா தம்பதியினரின் ஒரு வயது மகளுக்கு முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் அந்த குழந்தைக்கு "நிலாவினி" என்று திரு.டிடிவி தினகரன் பெயர் சூட்டினார். இந்த சந்திப்பின்போது தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா உடனிருந்தார்.

நீடாமங்கலம் நகர செயலாளர் திரு.சங்கரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரனுக்‍கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது திருவாரூர் மாவட்டச் செயலாளர் திரு.காமராஜ், தலைமை நிலையச் செயலாளர் திரு. திருச்சி மனோகரன், கழக அமைப்புச் செயலாளர் திரு.சிவா.ராஜ மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

திரு. டிடிவி தினகரனை, திருச்சி வடக்கு மாவட்டம், லால்குடி ஒன்றிய செயலாளர் திரு.விஜயமூர்த்தி தனது குடும்பத்தினருடன் சந்தித்து, தங்கள் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை வழங்கினார். இந்த சந்திப்பின்போது தலைமை நிலையச் செயலாளர் திரு.திருச்சி மனோகரன் உடனிருந்தார்.

தஞ்சை வடக்கு மாவட்டம், திருவையாறு ஒன்றிய கழக பிரதிநிதி திரு.ராமன், தனது இல்லத்திருமண விழா அழைப்பிதழை கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனிடம் வழங்கினார். இந்த சந்திப்பின்போது திருவையாறு ஒன்றியச் செயலாளர் திரு.புனல் செந்தில், திருவையாறு நகரக்‍ கழகச் செயலாளர் திரு.வடிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00