தொடர் மழையால் முழு கொள்ளளவை நெருங்கும் வீராணம் ஏரி : நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் 46 அடியாக உயர்வு
Nov 20 2023 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டிவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒன்றரை லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வீராணம் ஏரி, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் நீர்மட்டம், தொடர் மழை காரணமாக 46 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 59 கன அடி நீர் வரும் நிலையில் அவை முழுவதும் சென்னை குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து தொடர்வதால் இன்னும் ஓரிரு தினங்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.