கோவையில் சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதிய கார் : தூக்கிவீசப்பட்ட பெண் படுகாயம் - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Oct 4 2023 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை அருகே சாலையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்த பெண் மீது கார் ஒன்று அதிவேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சிந்தாமணி பகுதியை சேர்ந்த லீலாவதி என்பவர், வீட்டு வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் லீலாவதி கென்னடி திரையரங்கு அருகே பணிக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று லீலாவதி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுங்காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய வட மாநிலத்தை சேர்ந்த உத்தம்குமார் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.