காஞ்சிபுரம் செய்யாற்றுக் கால்வாயில் மீன்பிடித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி : சேற்றில் இருந்து சிறுவன் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர்
Sep 28 2023 7:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே செய்யாற்றில் மீன் பிடித்து விளையாடிய சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரமேரூர் அருகே உள்ள ஒழுக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ரித்தீஷ், அங்குள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ரித்தீஷ் தனது நண்பர்களுடன் அருகே உள்ள செய்யாற்றுக் கால்வாயில் மீன்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்த ரித்தீஷ் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் பலமணி நேர தேடுதலுக்குப் பின்னர் சேற்றில் இருந்து ரித்தீசை சடலமாக மீட்டனர். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.