திருவண்ணாமலை அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் : மழைநீர் வடிகால் பராமரிக்கப்படாததால் தண்ணீர் தேங்கிய அவலம்
Sep 28 2023 7:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மழைநீர் வடிகால்வாய் பராமரிக்கப்படாததால், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து குளம்போல் காட்சியளிக்கிறது. ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் ஆரணி டவுன், ஜெயலட்சுமி நகர், தேனருவி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இப்பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால், மழைநீர் ஏரிக்கு செல்லாமல் அப்படியே தேங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள சூழலில், தேங்கிய மழைநீராலும் நோய்தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதாக வேதனை தெரிவித்த அப்பகுதி மக்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.