கேரள குப்பைகளை கொட்டும் கிடங்காக மாறும் குமரி மாவட்டம் : சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை
Sep 23 2023 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலத்தின் கழிவுகளை கொட்டி செல்லும் குப்பை கிடங்காக கன்னியாகுமரி மாவட்டம் மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். களியக்காவிளையில் 20 சோதனை சாவடிகள் இருந்தும், அதையும் தாண்டி சர்வ சாதாரணமாக கேரளாவில் இருந்து கோழிக்கழிவு, மாட்டிறைச்சி கழிவு மற்றும் மருத்துவக் கழிவுகளை தினசரி கொட்டி செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அண்மையில் மாட்டு எலும்புகள் மற்றும் கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த வாகனங்களை சிறை பிடித்து போலீசில் ஒப்படைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே போலீசாரும், சுகாதாரத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.