திருவள்ளூர் அருகே இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம் : மனைவியே கொலை செய்தது அம்பலம் - தலையணை வைத்து கொலை செய்த மனைவியை கைது செய்த போலீஸ்
Sep 23 2023 5:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பமாக, அவரை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார். வாணியன் சத்திரம் கிராமத்தில் வசித்து வந்த ரமேஷ், குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக வெங்கல் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ரமேஷின் பிரேத பரிசோதனையில், அவர் மூச்சுத் திணறி இறந்ததாக தடயங்கள் இருந்ததையடுத்து, அவரது மனைவி தங்கலட்சுமியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதால் தனது கணவரை முகத்தில் தலையணை வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.