சென்னையில் ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தில் 4வது நாளாக வருமானவரி சோதனை : அரசு ஒப்பந்தங்கள் பெற்றதில் முறைகேடு - அதிகாரிகள் நடவடிக்கை
Sep 23 2023 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மின்சார வாரியத்திற்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக, தமிழகத்தின் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மின்சாரத் தேவை திட்டங்களை மேற்கொண்டுவரும் ராதா என்ஜினியர் நிறுவனம், ஆண்டிற்கு 800 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் அரசிடம் ஒப்பந்தங்கள் பெற்றதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தெரியவந்ததையடுத்து, 4 நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.