மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மகிழ்ச்சி அளிக்கிறது : புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
Sep 23 2023 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா மகிழ்ச்சியை அளிக்கிறது. அனைத்து பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை நினைக்கிறேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளரிடம் பேசினார். மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை நினைக்கிறேன். அதற்காக எனக்கு விருப்பமான வடிவுடையம்மன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய வந்தேன். தமிழகத்தில் மட்டுமல்ல பொதுவாக டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் உள்ளது. மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.