கரூரில் வீட்டினுள் பதுங்கி இருந்த 6 அடி நீள நாகபாம்பால் பரபரப்பு : படம் எடுத்து ஆடிய பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
Sep 23 2023 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் வீட்டினுள் பதுங்கி இருந்த 6 அடி நீள நாகபாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர். மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை ஜீவா நகரில் வசிப்பவர் கந்தசாமி. இவரது வீட்டின் மாடிப்படி அருகில் பாம்பு ஒன்று சென்றதாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பாம்பு இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். அப்போது, படமெடுத்து ஆடிய நாக பாம்பை, பாம்புபு பிடிக்கும் உபகரணத்தின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.