ஏற்காட்டில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த நடைப்பயணம் : மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு
Sep 23 2023 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அற்ற ஏற்காட்டை உருவாக்க விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான ஏற்காட்டிற்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதை தொடர்ந்து அங்கு பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பயன்பாடு அற்ற ஏற்காட்டை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபயணம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.