சேலத்திலிருந்து அக்.16ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடக்கம் : பெங்களூரு, கொச்சின் மற்றும் ஐதராபாத் பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கம்
Sep 23 2023 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் விமான நிலையத்திலிருந்து அடுத்த மாதம் 16ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது. ஓமலூர் அருகே காமலாபுரத்தில் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வந்தது. சில காரணங்களால் கடந்த 2021ம் ஆண்டு இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், உதான் 5.0 திட்டத்தின் கீழ் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் சேலத்தில் இருந்து விமான சேவை மீண்டும் தொடங்குகிறது. அலையன்ஸ் ஏர் மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள், பெங்களூரு, கொச்சின், ஐதராபாத் ஆகிய பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளன.