மதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் நள்ளிரவில் தீ விபத்து : பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சேதமடைந்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு
Sep 23 2023 10:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை ரயில் நிலையம் எதிரே SBI வங்கியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. பணம் மற்றும் ஆவணங்கள் சேதமானதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே நிலையம் எதிரே பாரத் ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு 3 மணியளவில் வங்கி உள்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப் பாா்த்த அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமாா் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கணினி மற்றும் ஆவணங்கள் தீயில் கருகி சேதமாகின. தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து பணம் மற்றும் ஆவணங்கள் சேதமானதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.