திருப்பத்தூரில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்துவிட்டு தப்பிய நபரை கைது செய்து போலீசார் விசாரணை
Jun 8 2023 6:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நண்பரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். புதுமனை மலைமேடு பகுதியைச் சேர்ந்த அல்லாஹ்பகத் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த அல்லாஹ்பகத்தை, அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி தலைமறைவாக இருந்த இஸ்மாயில் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.