வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்ய கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி
Jun 8 2023 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்ய கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், கடந்த 2010ல் மண்டல பாஸ்போர்ட் உதவி அதிகாரியாக பணியாற்றிய கீதாபாய், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, அவரையும் அவரது கணவர் நரசிம்மபாய் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. வழக்கை விசாரித்த மதுரை சிபிஐ நீதிமன்றம், இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாலும், இதற்கு ஆவண, ஆதாரங்கள் உள்ளதாக சிபிஐ தரப்பில் பதிவு செய்த நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.