விருதுநகர் அருகே நண்பனின் திருமணத்தில் சண்டை சேவல், ஆட்டுக்கிடாய் அன்பளிப்பு : உறவினர்கள் மற்றும் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்
Jun 8 2023 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் அருகே நண்பனின் திருமண விழாவில் சண்டைக் கிடாய், சண்டை சேவல், நாட்டு இன நாய்களை சீர்வரிசைகளாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நரிக்குடி பகுதியை சேர்ந்த சிவா என்பவருக்கும், இருஞ்சிறை பகுதியை சேர்ந்த துர்கா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில், சிவாவின் நண்பர்கள் அனைவரும் ஒன்றினைந்து, தமிழக பாராம்பரிய முறையில், சண்டை ஆட்டு கிடாய், 5 சண்டை சேவல், நாட்டு ரக இனத்தை சார்ந்த கன்னி, சிப்பிப்பாறை உள்ளிட்டவைகளை திருமணத்திற்கு சீர்வரிசையாக வழங்கினர். இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.