சென்னையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தீக்குளித்த மாணவி பலி : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Jun 8 2023 4:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னை பெரம்பூரில் தீக்குளித்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொல்லம் தோட்டம் பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்பவர், மணலி மாத்தூரை சேர்ந்த ஆகாஷ் என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ஆர்த்தியின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஆர்த்தி, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.