அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வேதாரண்யம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை : மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல தடை
Jun 8 2023 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வேதாரண்யம் மீனவர்கள் 5 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை. அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயல் சின்னமாக வலுவடைந்துள்ளதால், காற்றின் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனிடையே நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியது. இதையடுத்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.