நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பணியைத் தொடங்கியது தமிழகத் தேர்தல் ஆணையம் : அடுத்த மாதம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை
Jun 8 2023 2:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் மாவட்ட வாரியாக எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தேவை என்பதை, மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்த பணிகள் நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் துறைக்கு சொந்தமான கிடங்குகளில் வைக்கப்படும் என்றும், வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இயந்திரங்களில் முதல் நிலை சோதனை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.