சென்னையில் ஏஆர்டி நிறுவனம் ரூ.1,500 கோடி பணமோசடி செய்ததாக புகார் : பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் முற்றுகை - பாதிக்கப்பட்டோர் போராட்டம்
Jun 5 2023 3:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை முகப்பேரில் பணமோசடி செய்த ஏஆர்டி நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காததால், 100-க்கும் மேற்பட்டோர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முகப்பேரை தலைமையிடமாக செயல்பட்டு வந்த ஏஆர்டி நிதி நிறுவனத்தில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்து, ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனம் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்டவர்கள் அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.