திருச்சி அருகே காதலியை பார்க்‍க வந்த காதலனுக்‍கு பொதுமக்‍கள் தருமஅடி : திருடன் என நினைத்து காதலனை தாக்‍கியதால் காதலி தூக்‍கிட்டு தற்கொலை

Jun 5 2023 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே காதலியை பார்க்‍கச் சென்ற காதலனை, திருடன் என நினைத்து பொதுமக்‍கள் தாக்‍கியதால், காதலி தூக்‍கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆமூர் கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்த மலையாளி என்பவரது மகள் சங்கவி, முசிறி அடுத்து மணல்மேடு பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு நாட்களுக்‍கு முன்பு இரவு நேரத்தில் சங்கவியைப் பார்க்‍க அவரது காதலன் வீட்டிற்கு வந்த நிலையில், அவரை திருடன் என நினைத்து, பொதுமக்‍கள் பிடித்து தருமஅடி கொடுத்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சங்கவி, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் சங்கவியின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்‍காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தீராத வயிற்று வலி காரணமான சங்கவி தூக்‍கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00