திருவாரூரில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் : போராட்டக்காரர்களை காவல்துறையினர் மிரட்டியதால் பரபரப்பு
Jun 5 2023 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடிப்படை வசதிகளை செய்து தராத திமுக அரசை கண்டித்து, திருவாரூர் மாவட்டம் கோவில்திருமாளம் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் திருமாளம் ஊராட்சிப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள், அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி, பூந்தோட்டம் - காரைக்கால் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ பகுதிக்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.