மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலி - போலீசார் விசாரணை
Jun 5 2023 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பழங்காநத்ததைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனது மனைவி மீனாட்சியுடன் உறவினர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மேலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், மீனாட்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.