2 நாட்களுக்கு பிறகு கோரமண்டல் விரைவு ரெயில் சேவை மீண்டும் தொடக்கம் : சென்னை சென்ட்ரலில் இருந்து சுமார் 4 மணி நேர தாமதத்திற்குப் பின் ரயில் புறப்பட்டது
Jun 5 2023 1:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்திற்கு பின்னர், அவ்வழியாக செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் இன்று சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாநாகா ரயில் நிலையம் அருகே கடந்த 2ஆம் தேதி அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், 275 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு, 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் இரவு பகலாக நடைபெற்ற சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து முதல் ரயிலாக கோரமண்டல் விரைவு ரயில் இன்று காலை இயக்கப்பட்டது.