சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிரிக்கும் என தகவல் : ஓரிரு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Jun 2 2023 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என பதிவிடப்பட்டிருந்தது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என குறிப்பிடப்பட்டது.