2011ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை : ஊதிய உயர்வு வழங்குவதற்கு தகுதித்தேர்வு அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Jun 2 2023 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2011-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, ஆசிரியர்களாக நீடிக்க முடியும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 2011ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், 2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை எனவும், தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என தெரிவித்துள்ளது. நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற தமிழக அரசின் விதியை ரத்து செய்த நீதிபதிகள், பதவி உயர்வுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என தெளிவுபடுத்தியுள்ளனர்.