80வது பிறந்தநாள் காணும் இசைஞானி இளையராஜாவிற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து : நூற்றாண்டுகளை கடந்தும் ஈடில்லா இசைப் பயணத்தையும், ஆன்மீகப் பயணத்தையும் தொடர்ந்திட வேண்டும் என வாழ்த்து
Jun 2 2023 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகத் தமிழர்களுக்கு கிடைத்த இசைப் பொக்கிஷமாக விளங்கும் இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாளில் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து இமாலய சாதனை படைத்த இசைஞானி இளையராஜா, மேல் தட்டு மக்கள் மட்டுமே ரசித்து வந்த கர்நாடக இசையை பாமரர்களுக்கும் எளிமையாக கொண்டு சேர்த்ததை எண்ணிப் பெருமிதம் அடைகிறோம் என்றும் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அன்பு சகோதரர் இளையராஜா நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழவும், நூற்றாண்டுகளை கடந்தும் ஈடில்லா இசைப் பயணத்தையும், ஆன்மீகப் பயணத்தையும் தொடர்ந்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.