திருப்பூரில் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி சிக்கிய சிசிடிவி காட்சி - தப்பியோடியபோது சரக்கு ஆட்டோ மீது மோதி விழுந்ததால் மடக்கிப்பிடித்த போலீஸ்
Jun 1 2023 6:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி டாட்டா ஏசி வாகனத்தில் மோதி கீழே விழுந்த போது போலீசார் மடக்கிப்பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் 3 போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக விசாரணை கைதியுடன் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றனர். அப்போது, அவர்கள் பிடியிலிருந்து திடீரென அந்த விசாரணை கைதி தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த 3 போலீசாரும் சுதாரித்து கொண்டு கைதியை பின்னால் விரட்டி சென்றனர். சுமார் 500 அடி தொலைவு வரை சாலையின் எதிர்திசையில் ஓடியபோது, சரக்கு ஆட்டோ ஒன்றின் மீது மோதி கைதி கீழே விழுந்துள்ளார். அவரை விரட்டி வந்த 3 போலீசாரும் விசாரணை கைதியை மடக்கி பிடித்து அழைத்துச் சென்றனர்.