7 முதல் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஆயுள் சிறைவாசிகளை விடுவியுங்கள் : தமிழக அரசுக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு கோரிக்கை
Jun 1 2023 6:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக சிறைகளில் உள்ள 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த இஸ்லாமியர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என இஸ்லாமிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், 7 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை சிறையில் இருப்போரை விடுதலை செய்வது குறித்து தேர்தல் வாக்குறுதி அளித்திருப்பதை ஆயுள் சிறைவாசிகள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதேபோல், ஆயுள் சிறைவாசிகளுக்கு நீண்ட பரோல் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு ஜமாத் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.