நாமக்கல் அருகே உயிருடன் இருக்கும் தாய்க்கு சிலை வைத்த மகன் - வீடியோ இணையத்தில் வைரல்
Jun 1 2023 6:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டம் துறையூர் அருகே உயிருடன் இருக்கும் தாய்க்கு சிலை வைத்து மரியாதை செலுத்திய மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலிப்பட்டியை சேர்ந்த பிரபு வெல்டிங் பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரின், சிறுவயது கனவு நிறைவேற்றும் விதமாக தனது தாய்க்கு உலக பெற்றோர் தினத்தையொட்டி, மார்பிள் கல்லால் ஆன ஒன்றரை லட்சம் மதிப்பில் சிலை வைத்து மரியாதை செலுத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.