திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கைலாசநாதர் கோயில் விழாவில் திமுகவினருக்கு முதல் மரியாதை - பொதுமக்கள் எதிர்ப்பு
Jun 1 2023 6:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கைலாசநாதர் கோயில் விழாவில்
திமுகவினருக்கு முதல் மரியாதை செய்ததற்கு கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவில் வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக கைலாசநாதர், செண்பகவல்லி, முருகன், உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் இந்து அறநிலைத்துறை சார்பில் திமுக நிர்வாகிகளுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது. இதற்கு கோவில் நிர்வாகிகள்மற்றும் விழா குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பண்டைய கால நடைமுறை வழக்கங்களை மாற்றாமல் அதனை பின்பற்றுமாறு வலியுறுத்தினர்.