திருச்சி அருகே பலத்த காற்றுடன் பெய்த மழையால் தாழ்ந்து தொங்கிய மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததால் மூதாட்டி உயிரிழப்பு
Jun 1 2023 6:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். மணப்பாறை அடுத்த சுக்காம்பட்டி பகுதியில் பலத்த காற்று வீசி, இடி மின்னலுடன் மழை பெய்ததால், மின்கம்பி ஒன்று தொங்கிக் கிடந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மீனாட்சியம்மாள் என்ற மூதாட்டி, அவ்வழியாகச் சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வையம்பட்டி போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.