தண்ணீர் லாரிகள் போராட்டம் வாபஸ் : குடிநீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவிப்பு
Jun 1 2023 6:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோரிக்கைகள் ஏற்கபட்டதால் தண்ணீர் லாரிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் மெட்ரோ குடிநீர் விநியோகிக்கும் லாரிகளின் உரிமையாளர்கள் நேற்று திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுந்தரம், தண்ணீர் லாரிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்தார். மேலும் கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.