மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்கவில்லை : மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
Jun 1 2023 6:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும், தமிழகத்தின் உரிமையை அவர் விட்டுக்கொடுத்து வருவதாகவும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு திமுக ஒன்றிய செயலாளர்கள் கையில் உள்ளதாக விமர்சித்தார். மேலும் அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கையை கண்டு முதலமைச்சர் பயப்படுவதாக தெரிவித்தார்.