சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் உள்ள ஏசியின் அவுட்டோரில் தீ விபத்து : தீயை கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் தீயை அணைத்தனர்
Jun 1 2023 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் உள்ள ஏசியின் அவுட்டோரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் உள்ள ஏசியின் அவுட்டோரில் திடீரென ஏற்பட்ட தீ, அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளிலும் பற்றியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவலர்கள், தீயை அணைத்தனர். மேலும் தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.