நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில்லை என உயர்நீதிமன்ற கிளை கண்டனம் : தடை விதித்ததை மட்டும் நீக்க அனுமதி கோருவது எப்படி நியாயம்? மத்திய அரசுக்கு கேள்வி
Jun 1 2023 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பல்வேறு வழக்குகளில் மத்திய அரசு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டித்துள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மனுவை ஏற்று "மத்திய அரசின் வன திருத்த மசோதா முன்மொழிவுக்கான கருத்து, பரிந்துரைகளை இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தெரிவிக்கும் அறிவிப்பானைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்க கேட்டு மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்தார். அதற்கு நீதிபதிகள், பல வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல், தடை விதித்ததை மட்டும் நீக்குமாறு முறையீடு செய்வது எப்படி நியாயம் என்று கேள்வி எழுப்பினர். மேலும் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றி விட்டு பிறகு வாருங்கள் என்று மத்திய அரசு வழக்கறிஞரை திருப்பி அனுப்பினர்.