ஸ்ரீரங்கம் அருகே பல மாதங்களாக தண்ணீர் கேட்டு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை : குடிநீர் தொட்டிக்கு சூடமேற்றி, குலவையிட்டு வழிபாடு நடத்திய கிராமமக்கள்
Jun 1 2023 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே குடிநீர் தொட்டிக்கு சூடமேற்றி, குலவையிட்டு நூதன முறையில் வழிபாடு நடத்தி, தண்ணீர் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளுக்காடு கிராமத்தில் கை பம்ப் அமைந்துள்ள பகுதியில் புதர் மண்டி கிடப்பதாக புகார் தெரிவித்த அப்பகுதி மக்கள், முறையான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் திமுக அரசை கண்டித்தும், நல்ல தண்ணீர் வழங்க கோரியும், குடிநீர் தொட்டிக்கு சூடமேற்றி, குலவையிட்டு நூதன முறையில் வழிபாடு நடத்தினர்.