மதுரை - நத்தம் பறக்கும் பாலத்திலிருந்து அருவி போல ஊற்றிய மழைநீர் : சிமெண்ட் பூச்சு பெயர்ந்து தண்ணீர் கொட்டுவதாக புகார்
Jun 1 2023 3:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிதாக திறக்கப்பட்ட மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து, மழைநீர் அருவிபோல் கொட்டும் காட்சி வைரலாகி வருகிறது. மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தூரம் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தில் தற்போது சிமெண்ட் பூச்சு பெயர்ந்து, மழைநீர் கொட்டுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்தபடி செல்லும் அவலநிலை ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.