தமிழ்நாட்டில் தஹி பெயர் பிரச்சினை வெடித்த நிலையில் ராகுல்காந்தியின் தயிர் வீடியோ வைரல்
Mar 30 2023 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாட்டில் தஹி பெயர் பிரச்சினை வெடித்த நிலையில், ராகுல்காந்தியின் தயிர் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில், இந்தி வார்த்தையான 'தஹி' என அச்சிட வேண்டும் என்று மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ராகுல்காந்தி யூடியூப் சமையல் குழுவினருடன் இணைந்து சமைத்தபோது தயிரு என்று தமிழில் சொன்ன வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினருடன் சேர்ந்து சமைத்த ராகுல் வெங்காயம், தயிர், கல் உப்பு, என்று தமிழில் பேசிய வீடியோ இப்போது ட்ரெண்டாகி வருகிறது.